தானாடல்

தானாடல்

 

தன்னைப் பற்றித் தான் கொண்டது
தான் சொல்லல் ‘தானாடல்’.

 

குடும்பக் கிளை

 

இளையதம்பி (ஐயா) இளையபிள்ளை (அம்மா)
(விவசாயம், வியாபாரம், அரிசி ஆலை உரிமையாளர்)

 

பத்மநாதன் (நான் ஒரே மகன்) பாக்கியரத்தினம் (மனைவி)

 

கலாநிதி (மகள்)                       கருணாநிதி (மகன்)
சிறீபாலன் (மருமகன்)             பாரதா (மருமகள்)
அருந்ததி (பேத்தி)                   யாதவன் (பேரன்)
   குந்தவி (பேத்தி)                                                     

 

யாழ்ப்பாணக் குடாநாட்டில்
வடமராட்சியில்
நெல்லியடி என்ற கிராமத்தில்
எனக்குத் தெரிந்தவரை
நான் ஐந்தாவது தலைமுறை

 

பிள்ளையினார்
சின்னத்தம்பி
சின்னையா
இளையதம்பி
பத்மநாதன்

 

 

பிறந்த நாள் பிரச்சினை

 

சாதகப்படி நான் பிறந்த திகதி 22 – 11 – 1937.
பதிவாளரிடம் பிறப்பைப் பதியச் சென்ற நாள்
பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில்
பிறந்த திகதியாகப் பதியப்பட்டுவிட்டது போலும்.
ஆகவே சட்டப்படி என் பிறந்த திகதி 05 – 01 – 1938.
ஆனாலும், நான் பிறந்த நாள் சாதகப்படி கார்த்திகை 22 ஆம் நாள்.

 

கல்வித் தகைமை

 

அரிவரி முதல் பொதுத் தராதரம் (GCE O/L – December 1955)
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்.

பல்கலைப் புகுமுகப் பரிட்சை (HSC, GCE A/L – December 1958)
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.

 

கல்யாணம்

 

கல்யாணத்தால் கல்வி தடைப்பட்டது.

பத்தொன்பது அகவையில் மண உறுதி செய்யப்பட்டு
இருபத்தொன்றில் வதுவை: 20 – 05 – 1959

மனைவி இறப்பு: 02 – 02 – 1972

 

தொழில்

 

அரசாங்க எழுது வினைஞர்: 01 – 04 – 1960

பொது வேலை நிறுத்தத்தில் பங்குபற்றி வேலை நீக்கம்: 17 – 07 – 1980

புலம் பெயரும்வரை அச்சக உரிமையாளர்: 1981 – 1985

 

அலைவு

 

தமிழ்நாட்டில் அகதி வாழ்வு: 1985 – 1993

ஆஸ்திரேலியா புலப் பெயர்வு: 04-11-1993 

ஆஸ்திரேலியக் குடிஉரிமை: 23 – 4 – 1996

 

அரங்கு

 

பள்ளிக் காலம் முதல் பட்டப் படிப்புவரை என்னுடன் தொடர்வது
அரங்கும் அரங்கியலும்

VICTORIA UNIVERSITY
Bachelor of Arts (Honours)
Performance Studies
1997

MONASH UNIVERSITY
Master of Theatre
2005

 

தேடல்

 

தமிழ்த் தேசிக அரங்கு